இந்தியாவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்கிறார்கள். வங்கிகளுக்கு ஒரு முக்கிய காரணத்திற்காக செல்லும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக மதிய உணவு இடைவேளை என்று கூறிவிட்டு மூன்று மணி நேரம் வரை காத்திருக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக சமீப காலமாக இணையதளங்களில் செய்திகள் வருகி வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கிகளில் மதிய உணவு இடைவேளை நேரம் என்பது எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பொதுவாக வங்கி ஊழியர்களின் பணி நேரம் 8 மணி நேரம். இதில் அவர்களுக்கு உணவு இடைவேளைக்கு என்று தனியாக நேரம் கிடையாது. ஆனால் அவர்களும் சக மனிதர்கள் என்பதால் தொழிலாளர்கள் சட்டத்தின் படி அரை மணி நேரம் மட்டும் உணவு இடைவேளை உண்டு. இந்த நேரத்தில் அனைத்து ஊழியர்களும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடக்கூடாது. முதலில் ஒரு ஷிப்ட் ஊழியர்கள் சாப்பிட சென்றால் அவர்கள் மீண்டும் அந்த பிறகு தான் அடுத்த ஷிப்ட் ஊழியர்கள் செல்ல வேண்டும். ஒருவேளை இந்த விதிமுறைகளை மீறி வங்கியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நீங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறை பற்றி வங்கியில் தாராளமாக தெரிவிக்கலாம்.