
மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் சிலர் தலைமுறை வாக்கியுள்ளனர். அவர்கள் ஓடி, ஒளிய முடியாது. விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் இன்னும் யார், யாருக்கு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் உண்மையான ஹீரோவாக செயல்பட்டுள்ளன. பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால் தான் போர் நிறுத்தப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
கனவு காண அவர்களுக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் அமையும் கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை. அதிமுக, பாஜனதா கூட்டணி அமைந்தது திமுகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது தான் நல்லது. கூட்டணி வைப்பதும் தனித்துப் போட்டியிடுவதும் அவரது விருப்பம் என்று கூறினார்.