தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி அதாவது இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் எம் பி, எம் எல் ஏ-கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார். அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.