திரையுலகில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 எடுக்கப்பட்டது. புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் புஷ்பா 2 பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளியோடு சேர்த்து ரசிகர்கள் போஸ்டரையும் வைரல் ஆக்கி வருகின்றனர்.

https://x.com/MythriOfficial/status/1851882520490516522