ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குட்டியம் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் கடந்த 3-ஆம் தேதி பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நியாய விலை கடையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு தரம் குறைவாக இருந்ததை பார்த்தார்.

இதனால் உடனடியாக அதனை மாற்றி தரமான பருப்பை வழங்குமாறு விற்பனையாளரை கண்டித்துள்ளார். அதற்கு விற்பனையாளர் எங்களுக்கு கொடுக்கப்படும் பருப்பு இந்த தரத்தில் தான் இருக்கிறது என குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் குடோனிலிருந்து எடுக்கும் போது தரம் குறைந்த பொருட்களை வாங்காமல் வரவேண்டும். மேலும் நியாய விலை கடையில் இருக்கும் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.