கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை மடவிளாகத்தில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ராகுல். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் இருக்கிறது. அங்கு புதிதாக ராகுல் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற இயலவில்லை. இதனால் விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தர ராகுல் வருவாய்த்துறையினரிடம் விண்ணப்பித்தார்.

இந்த மனுவின் நிலை குறித்து கேட்ட சென்றபோது துணை தாசில்தார் ருக்மணி ஜெகதீஸ்வரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ஜெகதீஸ்வரி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ருக்மணியிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துணை தாசில்தார் ருக்மணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.