டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பொதுமக்களிடையே தகராறுகள், சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம் ஆகி வருகிறது. சமீபத்தில் ஒரு இளம் பெண் வயதான நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் “நீங்கள் எல்லாம் அழுக்கு சாக்கடைப்புழுக்கள், வாயை மூடு” என கடுமையான வார்த்தைகளால் முதியவர் ஒருவரை திட்டுகிறார். அதற்கு அந்த முதியவர் “இதுதான் உங்க பண்பாடு” எனக் கூற அந்தப் பெண் மேலும் ஆத்திரத்தில் “உங்களை மாதிரி பண்பாடு வேண்டாம். வாயை மூடுங்க” எனக்கு கூறுகிறார்.

அதற்கு அந்த முதியவர் “சன் கிளாஸ் போட்டு மெட்ரோ ரயிலில் அலைகிற” என கூறவும் ரயிலில் உள்ள அனைவருமே சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், சத்தமாக சிரித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் வந்த மற்றொரு பெண் “நீங்க தள்ளிப் போய் உட்காருங்க” என அந்த முதியவரிடம் கூறுகிறார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் டெல்லி மெட்ரோவின் சிசிடிவி காட்சிகளை நேரடி ஒளிபரப்பாக வெளியிட்டால் டிக்கெட் விற்பனையை விட அதிகமான வருமானம் கிடைக்கும் என விமர்சித்து வருகின்றனர்.