செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நான் தனிச்சு தான் போட்டியிட்டு வாரேன். நீங்க பாக்குறீங்க.  நான் ஒரு விழுக்காடு 1.1% இருக்கும் போதும் தனித்து நின்றே.ன்  4  விழுக்காடு,  5  விழுக்காடா இருந்தபோதும் தனித்து தான் நின்றேன்.  இப்ப ஏழு விழுக்காடா  இருக்கும்போதும் தனிச்சு  தான் நிற்பேன்.  1949இல்  கட்சி ஆரம்பிச்சு, 1967 இல் ஆட்சிக்கு வந்தப்ப  அண்ணாதுரை கிட்ட கேட்டீங்களா ? நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க…  நீங்க கேட்டீங்களா ? திரும்பத் திரும்ப இந்த கேள்வியை கேட்கக்கூடாது.

என்றாவது ஒருநாள் தோற்று போற கோட்பாட்டை ஏற்று அதன் வெற்றிக்கு நான் பாடுபடுவதை விட,  என்றாவது ஒருநாள் வெல்லப்போகிற கோட்பாட்டை ஏற்று அதன் வெற்றிக்காக போராடி தோற்றுப் போவதே மேல் என்று பிரதமர் உரையில் நேரு பேசினது இருக்கு.  நான் தற்காலிக தோல்விக்கு நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. நான் பிரபாகரன் மகன்.

கருணாநி, எம்ஜிஆர்,  ஜெயலலிதா பார்த்து அரசியல் செய்ய வந்தவன் அல்ல. நாங்க இன்னைக்கு நேத்து போராடவில்லையே…. நாங்கள் இந்த நிலத்தை ஆண்டு 800 ஆண்டுகள் ஆற்று. ஊடகவியலாளராக… உடன்பிறந்தவர்களாக… பெரிதும் மதிக்கின்றவர்களாக நான் உங்களை கேட்கிறேன் இலவசம் எங்களுக்கு கொடுங்கன்னு வீதியில் வந்து போராடி நீங்கள் பார்த்ததுண்டா ? ஆசிரியர் பெருமக்கள் பணி கொடுங்கள் என்று தான் கேட்டாங்க. வேலை தாங்கன்னு தான் கேக்குறாங்க என தெரிவித்தார்.