பொதுவாக மார்ச் மாதம் முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்முறைகளை கண்காணித்து வரும் பணிகளை செய்கிறது. இதன் மூலம் திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே சமயத்தில் சிலருக்கு போனஸ் கூட கிடைக்கலாம். இதனால் ஒரே மாதத்தில் ஊழியர்களின் வங்கி கணக்கில் பெரிய தொகை வந்து விழுகிறது. இந்நிலையில் மதிப்பீட்டுக்கு பிறகு கிடைத்த பணத்தை எப்படி சேமிக்கலாம் அல்லது எதில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆனால் நீங்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பாக திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வங்கிகளில் ரெக்கார்டிங் டெபாசிட் மூலம் பாதுகாப்பான முதலீடு செய்யலாம். இந்த கணக்கில் நல்ல வட்டி லாபமும் கிடைக்கிறது. மேலும் பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் முதலீடு செய்து பயன்பெறலாம். பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் அடிக்கடி உயர்ந்து வருவதால் இதுவும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.