சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர் வழி பாதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் மூலம் எடப்பாடி சங்ககிரி சாலையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெற்று கொண்ட மக்கள் நீர் வழிப்பாதையில் குடியிருந்து வந்துள்ளனர்.

நேற்று எடப்பாடி தாசில்தார் லெனின், கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் வீடுகளை இடித்து அகற்ற முயன்றனர். அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற கால அவகாசம் வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் விதமாக உடனடியாக 40 குடியிருப்புகளையும் இடித்து அகற்றினர்.