மத்தியபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ். இவர் ஒரு பெண்ணை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயற்சித்துள்ளார். அதாவது ஒரு வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வரும் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்தப் பெண் அசாமை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சஞ்சய் யாதவை தெரியும். இவருக்கு அசாமுக்கு பணி மாறுதல் கிடைத்த நிலையில் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடி அங்கு வந்துள்ளார்.

பின்னர் ஒரு அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அந்த ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை நுழைக்க முயற்சித்துள்ளார். அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்த பெண் நடக்க முடியாத நிலையில் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை சஞ்சய் யாதவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.