தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் சந்தானம். இவர் சமீப காலத்தில் நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா என்ற பாடல் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்து மக்கள் கொண்டாடும் புனித ஸ்தலங்களில் ஒன்றாக திருப்பது ஏழுமலையான் கோவில் உள்ளது.

இப்படத்தில் இந்துக்களின் மனம் புண்படும்படி கோவிந்தா கோவிந்தா கிசா 47 பாடலை வைத்திருக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தில் உள்ள பெருமாள் குறித்த பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம், ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் அக்கட்சியினர் புகார் அளித்தனர்.