
தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு தனி செயலியை ஒன்றை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற தவெக மாநில முதல் மாநாடு முடித்த பின்பு, உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் அதிகமாகிவிட்டது. இதனால் தவெக சர்வர் கடந்த சில நாட்களாகவே முடங்குவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, செயலி வாயிலாக ஒரே நேரத்தில் பலரும் உறுப்பினராக சேர ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அடிக்கடி சர்வர் முடங்குகிறது. எனவே உறுப்பினராக சேர இருப்பவர்களின் விவரத்தை சேகரித்து சர்வர் இயல்பு நிலைக்கு திரும்பியதும், அதில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.