இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு ஸ்மார்ட்போனை கொடுத்து விடுகின்றன. ஆனால் அது நல்லதல்ல என்று sapien labs நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதால் அவர்களுக்கு டீனேஜ் ஆகும்போது மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும். மேலும் குழந்தை பருவத்தில் இருந்தே மொபைலை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இடையே கோபம் மற்றும் தற்கொலை எண்ணம் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிக நேரம் குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் ஓடி ஆட மறந்து விடுகிறார்கள். ஒரே இடத்தில் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறித்து விடுகிறது. இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது. இரவு முழுவதும் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பள்ளிக்குச் சென்று குழந்தைகள் அங்கு தூங்கிவிடுகிறார்கள். அதுமட்டுமன்றி நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அதுமட்டுமன்றி மிக விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனிமேல் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து பழகாதீர்கள்.

தடுக்கும் வழிகள்

செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வெளியில் கூட்டிச் சென்று விளையாட பழகுங்கள். செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். சிறிது நேரம் இடைவெளிவிட்டு செல்போன் கொடுப்பது நல்லது. செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் கழுத்தில் குனிந்தபடி இருக்க விடக்கூடாது. குழந்தைகளுக்கு செல்போன் கையில் கொடுக்கும் முன்பு அதனை ஏரோபிளேன் மோடில் போட்டு கொடுங்கள். அதனால் கதிரியக்க பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.