கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்டு மருத்துவ மாணவியின் நண்பரான பாலகிருஷ்ணன் என்பருடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். இதனையடுத்து கவுசல்யா பாலகிருஷ்ணனிடம் கேட்டு மருத்துவ மாணவியின் புகைப்படத்தை வாங்கியுள்ளார்.

பின்னர் கவுசல்யா அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவ மாணவியின் உறவினர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தினர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கவுசல்யா , பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.