மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். அதிலும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆட்டத்தை வென்றால் மட்டுமே அவர்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்நிலையில் போட்டி குறித்து பல தகவல்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மே 18 இல் இருந்து 20 வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் விளையாட்டில் ஓவர்கள் குறைக்கப்படலாம் இதனால் ஆர் சி பி உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு குறையும் எனவும் அல்லது போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டால் ஆர் சி பி அணி வெளியேறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் ஆர் சி பி ரசிகர்கள் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது வீண் போகக்கூடாது என கடவுளை பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.