இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்s அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது நீங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவீங்கன்னு ரசிகர்கள் எதிர்பார்த்தாங்க. அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடராஜன் கூறியதாவது, அது நம்ம கையில் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்த எல்லோரும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

எல்லாருடைய ஆசையும் அதுதான். ஆனால் அது நம் கையில் இல்லை என கூறினார். பின்னர் தோனி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடராஜன் கூறியதாவது, எம்.எஸ் தோனியை எல்லோருக்கும் பிடிக்கும். நான் பக்கத்தில் இருந்து அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். நான் எம்.எஸ் தோனியை பார்த்தவுடனே அவர் முதன் முதலில் என்கிட்ட பிட்னஸ் பற்றி தான் கேட்டார். உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறாயா என்றுதான் கேட்டார்.  விளையாட்டு வீரருக்கு அது ரொம்ப முக்கியம். இந்த துறை மட்டுமில்லாமல் எல்லா துறைகளில் வேலை பார்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் உடம்பை நல்லபடியாக பராமரிக்க வேண்டும்.

குடும்ப கஷ்டம், குடும்ப சூழ்நிலை அனைத்தையும் மனதில் வைத்து  கொண்டு உடல் நலனை கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் தினமும் குடும்பத்திற்காக நேரம் செல்ல விட வேண்டும். உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். தோனி ஃபிட்னஸ் பற்றி கேட்பார். பவுலிங் பற்றி சொல்லுவார். சில பேரை பார்க்கும்போது பாசிட்டிவ் வைப் வரும். கண்டிப்பாக தோனியை பார்க்கும்போது அப்படித்தான் தோணும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.