இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நீங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவீங்கன்னு ரசிகர்கள் எதிர்பார்த்தாங்க. அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தால் நடராஜன் கூறியதாவது. அது நம்ம கையில் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்த எல்லோரும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். எல்லாருடைய ஆசையும் அதுதான். ஆனால் அது நம் கையில் இல்லை.

கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் கஷ்டப்பட வேண்டும். விளையாட்டு வீரருக்கு உடம்பு தான் மூலதனம். அப்படி இருக்கும்போது உடம்பை ஃபிட்டாக நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல கடின முயற்சி, அர்ப்பணிப்பு இது எல்லாம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும். நிறைய பிரச்சனைகள் தடைகள் வரும். அதனை எல்லாம் எதிர்கொண்டு தாண்டி வர வேண்டும். எனக்கு கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பிற விளையாட்டுகள் தெரியாது. எனக்கு கிரிக்கெட் மீது அதிக காதல் உள்ளது. நீங்களும் இந்த துறையை காதலித்து கடின பயிற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம் என கூறியுள்ளார்.