கரோனா தடுப்பூசிக்காக COWIN செயலியில் பதிவு செய்தவர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. CoWIN செயலி தனிநபர் விவரங்கள் டெலிகிராம் போட்டில் லீக்கானதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை மறுத்து NHC தலைவர் RS சர்மா வெளியிட்ட அறிக்கையில், ‘அதிநவீன பாதுகாப்பு உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கிற CoWINலிருந்து தரவு கசியவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் கோவின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.