இந்தியாவில் தெரு நாய்களின் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் நீதிபதிகள் இதுகுறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளனர்.  நாய் கடியால் பாதிக்கப்படுவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணை  ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, 

ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால்,  ரூபாய் 10,000 வரையில் இழப்பீடும்,  சுமார் 0.2 சென்டிமீட்டர் ஆழம் வரை காயம் பதிந்தால் ரூபாய் 20 ஆயிரம் வரை இழப்பீடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதோடு,  இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்க குழு ஒன்றை நியமிக்குமாறும்  உத்தரவிட்டது.  இந்தியாவிலேயே நாய்கள் தாக்குதல் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.