கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அவர் 150 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆறுமுகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.