விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியின் பாட்டி பணம் கொடுத்து அருகில் இருக்கும் கொய்யா தோப்பிற்கு சென்ற கொய்யாப்பழம் வாங்கி வருமாறு கூறினார். அதன்படி சிறுமி தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியாக வேலை பார்த்த செந்தில் என்பவர் சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் செந்திலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.