
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ தனக்கு இந்த விவாகரத்து பற்றி எதுவும் தெரியாது எனவும் தன் காதுக்கு வராமல் தன்னிடம் கலந்தாலோசனை செய்யாமல் ஜெயம் ரவி அறிவித்துவிட்டார் என்றும் கூறினார். அதன் பிறகு ஜெயம் ரவியை பலமுறை சந்தித்து பேச முயற்சி செய்தும் ஒருமுறை கூட தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் என்ன செய்வது என்று தெரியாமல் தானும் தன் குழந்தைகளும் தவிப்பில் இருப்பதாக ஆர்த்தி ரவி கூறி இருந்தார்.
இந்நிலையில் பாடகி கெனிஷாவுடன் நடிகர் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாகவும் அதனால்தான் ஆர்த்தியை பிரிவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. இதற்கு தற்போது நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னை பாடகி கெனிஷாவுடன் இணைத்து பேசாதீர்கள். அது தவறு. நான் அவருடன் சேர்ந்த ஆன்மீக பயணம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருந்தேன். அதை தடுப்பதற்காக தான் சிலர் இப்படி தவறாக பேசுகிறார்கள் என்று கூறினார். மேலும் பாடகி கெனிஷா மற்றும் ஜெயம் ரவி இடையே தொடர்பு இருப்பதாக வந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள நிலையில் தற்போது அதற்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.