கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலட்சுமி, மாகாளி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு ஸ்லோகன் எழுதுதல் போட்டியும், சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.