நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன். இது எனது நாட்டிற்கு நான் அளிக்கின்ற உத்தரவாதம். இவர்கள் எப்போதும் நாட்டை கல்வியறிவு நிறைந்த நாடாக மாற்ற மாட்டார்கள். அந்த திசையில் இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  மதிப்பிற்குரிய ஜனநாயகத்தில் யாருக்கு நம்பிக்கை இல்லையோ, அவர்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.  ஆனால் கேட்பதற்கு தயாராக இருப்பதில்லை. குப்பைகளை வீசி எறிந்து விட்டு ஓடி விடு, ஏதாவது கெட்ட வார்த்தைகளை கூறிவிட்டு ஓடிவிடு, பொய் சொல்லிவிட்டு ஓடிவிடு. இதுதான் இவர்களது விளையாட்டு. இந்த நாடு இவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் உள்துறை அமைச்சரின் மணிப்பூர் பற்றிய கருத்தை ஏற்று இருந்தால் ? மணிப்பூர் பற்றிய விஷயத்தில் நாம் பெரிதாக விவாதித்து இருக்க முடியும். ஆனால் இவர்களுக்கு விவாதத்தில் நம்பிக்கை இல்லை. அமித் பாய் அவர்கள் நேற்று விபரமாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் எவ்வளவு பொய்கள் சொல்ல முடியுமோ, அவ்வளவு பொய்கள் சொல்லியுள்ளனர். இப்போது இவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.

அப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டு நம்பிக்கை எங்களிடம் தான் இருக்கிறது என்ற விபரங்களை தான் பேச முடியும். இதுதான் எங்களுடைய பொறுப்பாக இருக்கும். நாங்கள் ஆரம்பத்திலேயே சொன்னோம். மணிப்பூர் பற்றி தனியாக பேசுவோம் வாருங்கள் என்று கூறினோம். இவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை. இவர்களது மடியில் பாவம் இருக்கிறது… கணம் இருக்கிறது என தெரிவித்தார்.