தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் மற்ற கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் முடிந்த கூட்டணியை சட்டசபை தேர்தலை நோக்கி புதுப்பித்த அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து கூட்டணி ஆட்சியா?..  முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகள் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து கூட்டணியில் தொடரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, அதிமுக தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம்பெறும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் சிரித்துக் கொண்டே அவருக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கேட்க வேண்டாம் தயவு செய்து வேறு கேளுங்கள் என்றார். மேலும் பாஜக கூட்டணியில் அமமுக இருக்கிறதா சொல்கிறார்கள் சார் என்ற கேள்விக்கு அவர் இருக்கிறதா சொல்கிறார். அதற்கு நாங்கள் ஒன்னும் சொல்லவில்லையே நாங்கள் அதிமுக பாஜக கூட்டணி என்று கூறினார்.