நடிகை கன்னிகா, கர்ப்பமாக இருப்பதை எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னிகா மற்றும் கவிஞர் சினேகன் இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிகள், திருமணத்தின் பின்னர் தங்கள் வாழ்க்கையில் புதிய கட்டங்களை தொடங்கினர்.

சினேகன் மற்றும் கன்னிகா, சமீபத்தில் தங்களின் சொந்த கிராமத்திற்கு சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். கிராமப்புற வாழ்க்கையையும், விவசாயத்தில் ஈடுபடுவதையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

“>

 

இந்நிலையில், கன்னிகா தனது கர்ப்பத்தை அறிவித்து, “அம்மாவாகப் போகிறேன். உங்கள் அன்பும், வாழ்த்தும் வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார். அவர்களின் இந்தப் புதிய வாழ்க்கை கட்டத்திற்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.