தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு முந்தைய நாணயங்களை நினைவுபடுத்தும் விதமாகவும், இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாகவும், 5 பைசா முதல் 20 பைசா வரையிலும் உள்ள பழைய நாணயங்களை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வழங்கியுள்ளனர். இந்த அசைவ உணவு திறப்பு விழா சலுகையால் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வாங்கி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.