உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது தமிழர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்று 18 வயதே ஆன குகேஷ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14வது சுற்றில் 58வது காய் நகர்தலில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டி டிராவில் முடியும் என்று நினைக்கும் நிலையில் குகேஷ் 7.5 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக குகேஷ் வென்ற பரிசு தொகையை பற்றி பார்ப்போம். அதன்படி இவர் இந்திய மதிப்பில் 11.45 கோடி பரிசாக பெற்றுள்ளார். அதன்பிறகு இரண்டாம் இடத்தை பிடித்த சீன வீரர் டிங் லிரெனுக்கு 9.75 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இதில் மொத்த சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை 21.75 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறும் வீரருக்கு 1.69 கோடி பரிசாக வழங்கப்படும். இதில் குகேஷ் 3 சுற்றிகளிலும், டிங் லிரன் 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற நிலையில் மற்ற போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் குகேஷ் 11 வயதில் சொன்னதை தற்போது சாதித்து காட்டியுள்ளார். அவர் அப்போது பேசிய வீடியோ தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது பேட்டி ஒன்றில் உங்களது வயது தற்போது 11 ஆண்டு 6 மாதம். உங்களின் எதிர்கால லட்சியம் என்ன என்று கேட்டபோது நான் இளம் வயதில் சாம்பியன் ஆவேன் என்று கூறினார். அன்று அவர் சொன்னதை இன்று செய்து காட்டியுள்ளார். கடுமையாக உழைத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு குகேஷ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நேற்று கூட பிரதமர் மோடி வாழ்த்தும்போது இளைஞர்களுக்கு குகேஷ் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று வாழ்த்தினார். மேலும் குகேஷ் இதுவரை படைத்த சாதனைகள் தொடர்பான வீடியோவை பார்ப்போம். இதோ அந்த வீடியோ,