
தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள், பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது சட்ட ஒழுங்கு தமிழக அரசில் நிலையாக இல்லாததால் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதனால் தமிழக அரசு பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதில் அவர்கள் கூறியதாவது, பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல், துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 43,000 பேர் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், படங்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வோரை காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆபாச வீடியோக்களை வியாபார நோக்கில் பதிவிறக்கம் செய்து அடுத்தவருக்கு அனுப்பி வைப்பது போன்றவை தெரிந்தால் நிச்சயம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரித்துள்ளனர், ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு இதுவரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சைபர் கிரைம் குற்றப் தடுப்பு பிரிவு இணையதளங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது எனவும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.