கூகுள் பிளே ஸ்டோரில் ஏற்கனவே chat GPT ஆப் பட்டியலிடப்பட்டுள்ளது. Open AIநிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு செயலியின் வெளியீட்டை ட்விட்டரில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் ரெஜிஸ்டர் செய்து Chat GPT செயலியை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

இந்த செயலி அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்தால் ஆப்ஸ் வந்தவுடன் உங்கள் ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்படும். Chat GPTஎன்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரு சாட் போட் ஆகும். இது உங்களை கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை எழுத அனுமதிக்கிறது.