சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மொத்தம் மூன்று லீக் போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி, அடுத்து 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் . இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளுமேம் துபாயில் தான் நடைபெறும்.  பைனலுக்கு முன்னேறினாலும் அது துபாயில் தான் நடைபெறும்.போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியானது துபாய்க்கு புறப்பட்டு சென்றது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் துபாய்க்கு புறப்பட்டார்கள்.

துபாய் ஏர்போர்ட்டுக்கு சென்ற போது இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வரவேற்பை ஏற்றுக்கொண்ட இந்திய வீரர்கள் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற பேருந்தில் ஏறினார்கள். ஆனால் பேருந்தானது நீண்ட நேரம் புறப்படாமல் இருந்தது. உடனே பேருந்திலிருந்து வெளியே வந்த ரோகித் ஷர்மா நிர்வாகியோடு பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு தான் தெரிந்துள்ளது கே.எல் ராகுலை காணவில்லை என்பது. அதாவது கே.எல் ராகுல் விமானத்திலிருந்து இறங்கிய பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் இந்திய அணி வீரர்கள் இருந்த பேருத்திற்கு குறித்து நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து ராகுல் இல்லாமல் அந்த பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது.