மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தியாக இருக்கிறது. மத்திய அரசின் சுகாதார திட்டம் (CGHS) இந்திய மத்திய அரசின் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு திருப்பி செலுத்துதல் மற்றும் பணமில்லா வசதிகள் வழங்கப்படுகிறது. அரசின் திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி வீடியோ கால் வாயிலாகவும் பரிந்துரை செய்யலாம். சிஜிஎச்எஸ் நோயாளி போக முடியாவிட்டால், குடும்ப உறுப்பினரை அனுப்புவதன் வாயிலாகவும் அவர் பரிந்துரையை பெறலாம். தற்போது சிஜிஎச்எஸ் திட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் பெரிய மாற்றங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

OPD சிகிச்சைக்குரிய கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. IPD அதாவது அனுமதிக்கப்பட்ட நோயாளியிக்கு மருத்துவ ஆலோசனைக்குரிய கட்டணம் 300 ரூபாயிலிருந்து 350 ரூபயாக உயர்த்தப்பட்டது. முன்பாக ஐசியூக்கான அறை வாடகை கட்டணம் ரூபாய்.862 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது ரூ.5400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.