மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படியானது 42 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறையும் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வினால் ஊழியர்களின் சம்பளமும் உயரக்கூடும். மேலும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.