இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது ஒரு வீடியோவில் சுவற்றில் உள்ள ஜன்னலை ஒரு குரங்கு பிடித்தவாறு அமர்ந்திருக்கிறது. இதையடுத்து அதன் வாலை பிடித்து மற்றொரு குரங்கு தொங்குகிறது. அந்த குரங்கின் வாலை பிடித்து மற்றொரு குரங்கு தொங்குகிறது. இதையடுத்து இரண்டாவதாக இருந்த குரங்கு முதலில் இருந்த குரங்கின் வாலை பிடித்து மேலே ஏறுகிறது.

அப்போது அதனால் ஏற முடியவில்லை. இதனால் முதலில் இருந்த குரங்கு இரண்டாவது குரங்கின் காதை பிடித்து மேலே தூக்குகிறது. அதன் பிறகு மூன்றாவதாக இருந்த குரங்கு இரண்டாவது குரங்கின் வாலை பிடித்து மேலே ஏறுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.