தமிழகத்தில் வாழும் மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்கள்கள் சர்க்கரை, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசிய பொருள்களை நியாய விலையில் வாங்குகின்றனர். அத்தகைய ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இருக்கும் பிழைகளை சுயமாக ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது பற்றி காணலாம். முதலில் TNPDS என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்லவும்.

அங்கு “Beneficiary “என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பதிவு செய்து “Request on OTP” என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு மொபைல் போனிற்கு வந்திருக்கும் OTP-யை  என்டர் செய்யவும். இதையடுத்து உங்கள் சுயவரத் திறக்கப் பட்ட உடனே “smart card details ” என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் எந்த விவரங்களை மாற்ற நினைக்கிறீர்களோ அதை திருத்தம் செய்துவிட்டு ” Approval button” கிளிக் செய்யவும். அதன் பிறகு புதிய “PDF” சேவ் செய்து கொள்ளவும்.