தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 – 100 டிஎம்சி கடலில் வீணாக கலக்கின்றது. அதில் தர்மபுரிக்கு தேவையான நீர் மூன்று டிஎம்சி தானன். தர்மபுரிக்கு  நீர் பக்கீட்டை கொடுங்கள் என சட்டமன்றத்திலே முதல்வரை சந்தித்து எத்தனை முறை வலியுறுத்தி உள்ளோம்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை  எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சந்தித்து,  பலமுறை அழுத்தம் கொடுத்தனர். இதற்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். அத்தனை கட்சிகளும் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

அப்படி இருந்து இன்னும் இந்த திட்டத்தை பற்றி  முதலமைச்சரோ அல்ல மற்ற அமைச்சர்களோ  பேசாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்க்காக நிதி ஒதுக்கீடு செய்து,  இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை வேண்டுமென பல ஆண்டு காலமாக மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். வேலை வாய்ப்பு காரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள கிட்டதட்ட ஐந்து லட்சம் இளைஞர்கள் வெளிமாநிலத்திலும், வெளி மாநில மாவட்டத்திலும்  வேலை செய்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு வேண்டும். இதற்கு பல போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.  ஒவ்வொரு முறையும் அறிவிப்புதான் வந்திருக்கிறது. இப்போ சமீப காலத்திலே ஏதோ கொஞ்சம் வேலைகள் தொடங்கி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.