
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நீண்ட நாட்களுக்கு தேவையான பிளானை நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்தால் அதற்கு ஏற்ற ஒரு பிளான் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 425 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் பிளான் ஒன்றை தற்போது பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்தப் பிளானின் விலை 2398 ரூபாயாகும். வேலிடிட்டி காலம் முழுவதும் தினசரி 2ஜிபி என மொத்தம் 850 ஜி பி டேட்டா வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ் அனுப்பிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அன்லிமிடெட் அழைப்பு வசதியும் இதில் கிடைக்கும்.