
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தான் பிரச்சனை. பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது போன்று பிற தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை போன்றவைகளை எதிர்த்து பெரியார் போராடினார். ஆனால் பெரியார் மட்டும்தான் போராடினார் என்பதை ஏற்க முடியாது. இதற்காக போராடிய பிற தமிழ் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு விலகினால் நிச்சயமாக திமுகவினர் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றார். மேலும் அண்ணன் செய்வது சரி என்று தம்பி விஜய் ஏற்றுக் கொண்டால் என்னுடன் அவர் கூட்டணிக்கு வரட்டும். சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையெனில் அவர் அவருடைய வேலையை பார்த்துவிட்டு போகட்டும். எனக்கென்று தனி கனவு இருக்கிறது. மேலும் அதை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி வைப்போம் என்று கூறினார்.