தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டியை சந்தித்த அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை வாழ்த்தி,  அவருக்கு பூங்கொத்து அளித்ததாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது.  அப்போது போலீஸ் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரியும் உடன் அழைத்து அங்கே சென்றிருக்கிறார் அஞ்சனி குமார்.  தேர்தல் ஆணையம் இது தேர்தல் நடத்தை  விதிமுறைகளை மீறிய செயல் என கருதுகிறது.

தெலுங்கானா மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சியை வெற்றி முகத்தில் உள்ள சூழலில் ரேவந்த் ரெட்டி அடுத்த முதல்வராக வருவார் என கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் உயர் போலீஸ் அதிகாரியான அஞ்சனி குமார் அவரை சென்று சந்தித்து,  அவருக்கு மலர்  கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால் தான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவரை சந்தித்து அவருக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவிப்பதில் தவறி ஏதும் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதவில்லை.

ஆனால் தற்போது தேர்தல் நடந்து முடிந்து இன்று தான் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இன்னமும் பழைய அரசு ராஜினாமா செய்யவில்லை. புதிய அரசு பதவி ஏற்கவில்லை. அப்படிப்பட்ட நிலையிலே ஒரு அரசியல் தலைவர் என்ற அந்தஸ்தில் மட்டுமே இருக்கும் ரேவந்த் ரெட்டி எப்படி DGP சந்திக்கலாம் ?  என்ற கேள்வியின் காரணமாகத்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.