
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருவூலம் துணை அமைச்சருமான தஞ்சை இரா. ரத்னகிரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. திடீரென உடல்நிலை குன்றியதால், அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரின் குடும்பத்தினரிடம் ரத்னகிரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.