சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நாம் விலகி விட்ட பிறகு ஸ்டாலினுக்கு தூக்கமே போச்சு. ஆட்சி வந்த உடன் இரண்டரை ஆண்டு காலத்தில் சிறுபான் மக்களுக்கு எந்த நன்மையும்  செய்யல.   சிறுபான்மை மக்களுடைய வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் இன்றைக்கு ஏதேதோ புலம்பி கொண்டிருக்கின்ற காட்சியை பத்திரிகையில் ஊடகத்திலும் பார்க்கிறோம்.

ஸ்டாலின் அவர்களே நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். ஏற்கனவே 25.09.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற   தலைமைக் கழக நிர்வாகிகள் –

முன்னோடிகள்- கட்சியை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்பதை தெளிவு படுத்தி விட்டோம் ஸ்டாலின் அவர்களே.. என தெரிவித்திட்டார்.