முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், போலீஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகப் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவலில் வைத்து விசாரிக்கும் போது தன்னைத் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரி போலீஸார் கடுமையான நிர்பந்தம் அளித்ததாகக் கூறி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழ்நிலையில், நீதிமன்ற அழைத்துச் செல்லப்படும் வழியில் போலீஸார் மீது அவர் சுமத்தியுள்ள இந்த அதிரடி குற்றச்சாட்டு, இவ்வழக்கின் போக்கை முற்றிலும் புதிய கோணத்திற்குத் திருப்பியுள்ளது. இச்சம்பவம் திமுக மற்றும் ஆளுங்கட்சி தரப்பினரிடையே அரசியல் ரீதியான விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.

 

மேலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் வந்து இணையுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் ஆனால் நான் என்றென்றும் திமுகவில் வேண்டும் தான் இருப்பேன் என்றும் ஆவேசத்துடன் கூறினார்.