அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய அணியில் எம் எஸ் தோனி, ஜடேஜா, சிவம் துபே,, ருதுராஜ்‌ கெய்க்வாட், பத்திரனா ஆகிய 5 வீரர்களை தக்க வைப்பதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள 5 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரோகித் சர்மாவை 16.30 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடி ரூபாய்க்கும், சூரியகுமார் யாதவை 16.35 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மாவை 8 கோடி ரூபாய்க்கும், பும்ராவை 18 கோடி ரூபாய்க்கும் மும்பை அணி தக்க வைத்துள்ளது மேலும் ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.