
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மைதானத்தில் இருந்த வீரர்கள், சியர்லீடர்கள் மற்றும் 23,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பஞ்சாப் அணி 10.1 ஓவரில் 122 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது வந்த தகவலின் படி ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அட்டவணை ஒரு வாரம் கழித்து வெளியாகும் என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.