
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை தங்கமணி இங்கே போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒருவர் வேறு எங்கோ உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்களின் எதிர்காலத்தை எல்லாம் தீர்த்துப் போக செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.