
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் விசாரணை முடிந்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவைச் சந்தித்த பழனிசாமி, எதற்காக சந்தித்தார் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். அதனை அறியாமல் பச்சைப் பொய்களை அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!
நூறுநாள் வேலைத்திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டி ஒன்றிய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரிலும், நாடாளுமன்றத்தின் வாயிலாகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழ்நாடு அரசு, மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது திமுக.
ஆனால் தனது சந்திப்பால்தான் நிதி கிடைத்தது என கூசாமல் ‘Cringe’ செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!
அமித்ஷாவைப் பார்க்கப் போகிறேன் என்பதைச் சொல்லக்கூட திராணி இல்லாமல், டெல்லியில் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாரே கோழைசாமி, அதுதான் Original பித்தலாட்டம்! என்று கூறினார்.