தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், அது புயலாக மாறாது என்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 7 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளது.

இதற்கு பெங்கல் புயல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 90 km வேகத்தில் சூறைக்காற்றுடன் அடுத்த 7 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று இதனால் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.