ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜூன் வெற்றி பெற்றதன் மூலம் தங்கப்பதக்கம் இந்திய அணிக்கு உறுதியானது.

இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் என்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.