மக்கள் பேருந்து, ரயில், விமானம் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்தபோது என்ஜின் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் உடனடியாக ஓடுபாதையிலேயே விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. கோளாறு உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த விமானம் 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.